
வாகன விபத்துக்கள் ஏற்படுவதற்கான மூல காரணங்கள்.
- வீதிப்போக்குவரத்து விதிகளைச் சாரதிகளும், தெருக்களை உபயோகிப்பவர்களும் சரியாக பின்பற்றாமை.
- கவனயீனமாக வாகனங்களைச் செலுத்துதல் / குழப்பமான மனநிலை
- அதிவேகத்துடன் வாகனங்களைச் செலுத்துதல்.
- தெருக்களில் செல்வதற்குத் தகுதியற்ற வாகனங்களின் பாவனை.
வீதியில் விபத்துக்களைத் தவிர்க்கும் வகையில் பாதுகாப்பாக வாகனங்களைச் செலுத்துவதற்குச் சாரதிகள் முக்கியமாகக் கவனத்தில் எடுக்கவேண்டியவைகள்.
- விபத்துக்கள் ஏற்படக் கூடும் என உணரப்படும் இடங்களில் முன்னெச்சரிக்கையுடன் அவதானமாக உரிய முறையில் வாகனங்களைச் செலுத்துதல்.
- பாதுகாப்பான இடைவெளியில் வாகனங்களைச் செலுத்துதல்.
- இயலுமானவரை தனது வாகனம் செலுத்தும் ஒழுங்கைச் சரியாகப் பேணல்.
- பாதுகாப்பான முந்திச் செல்லும் முறை.
- இதற்கு முன்னர்தான் பல ஆண்டுகாலம் எந்தவொரு விபத்தையும் சந்திக்கவில்லை என்ற மனோநிலையில், தான்தோன்றித்தனமாக வாகனத்தைச் செலுத்துவதைக் கைவிடல்.
பாதுகாப்பான முறையில் வாகனத்தைச் செலுத்தும் சாரதியானவர் மற்றைய சாரதிகளின் முறைகேடான வாகனம் செலுத்துகைக்கும், மோசமான தெருக்களின் நிலைமைகளையும் காலநிலைகளையும் கருத்திற்கொண்டு எந்தநேரமும் முன்னேற்பாடான முறையில் வாகனங்களைச் செலுத்த வேண்டும். அத்துடன் வாகனமானது தெருக்களில் செலுத்துவதற்குரிய நிலையில் உள்ளதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
வாகன விபத்துக்கள் அதிகரித்துக் கொண்டே காணப்படுகின்றன. அதற்கான காரணங்கள் பின்வருமாறு:
- மது போதையில் வாகனம் செலுத்துதல்.
- உள் வீதியிலிருந்து மோட்டார் சைக்கிள்கள், துவிச்சக்கர வண்டிகளில் வருவோர்கள், பிரதான வீதியில் வருகின்ற வாகனங்களைக் கவனிக்காது நேரடியாகப் பிரதான வீதிக்குள் நுழைதல்.
- நாற்சந்தி சுற்று வட்டங்களில் வலப்பக்கம் வருகின்ற வாகனங்கள் செல்வதற்கு இடமளிக்காமை.
- ஏதோ ஒரு வாகனம் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போது அல்லது வாகனம் செல்லுகின்ற போது மோட்டார் சைக்கிளை அல்லது துவிச்சக்கர வண்டியை முன்னோக்கிச் செலுத்துகின்ற போது எதிரே வருகின்ற வாகனம் பற்றி அவதானம் இல்லாமல் வாகனம் செலுத்துதல்.
- சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்தக் கொடுத்தல்.
- அளவுக்கு அதிகமான வேகத்தில் வாகனம் செலுத்துதல்.
- வீதியில் ஒரே சமாந்தரத்தில் மூன்று அல்லது நான்கு துவிச்சக்கர வண்டிகளைச் செலுத்துதல்.
- பாதசாரிகள் வீதிகளைக் கடந்து செல்ல அடையாளமிடப்பட்ட இடங்களில் அவர்களுக்கு இடமளிக்காமல் செலுத்துதல்.
- பாவனைக்கு தகுதியற்ற வாகனங்களை வீதியில் செலுத்துதல்.
- சேதமான தேய்ந்த டயர்களுடன் வாகனங்களைச் செலுத்துதல்.
- வீதியில் இடம் உள்ள இடங்களில் வாகனங்களை நிறுத்தாது நெரிசலான இடங்களில் வாகனங்களை நிறுத்தி வீதித் தடைகளை ஏற்படுத்துதல்.
- வீதி வளைவுகளில் எதிரே பாதை தெளிவற்றுக் காணப்படுகின்ற போது வாகனங்களை முந்தி செலுத்துதல்.
- வலப்பக்க வளைவில் செல்லுகின்ற போது வாகனத்தை இடதுபக்க ஓரமாய்ச் செலுத்தாது, குறுகிய அளவில் வலது பக்கமாகவே பாரப்படுத்தி வளைவிற் செலுத்துதல்.
- இரவு வேளையில் வெளிச்ச விளக்கு இன்றி அல்லது ஒருபக்க வெளிச்ச விளக்குடன் வாகனம் செலுத்துதல்.
- இரவு வேளையில் எதிரே வருகின்ற வாகனங்களுக்குத் தமது வெளிச்ச விளக்கைக் குறைக்காமல் (டிம் இன்றி) வாகனத்தை செலுத்துதல்.
- இரவு வேளிையல் வீதியோரங்களில் வாகனத்தை நிறுத்தி வைக்கும் போது அபாய விளக்கு எரியப்பட விடாமை.
- இரவு வேளையில் துவிச்சக்கர வண்டியில் வெளிச்ச விளக்கு இல்லாமலும். பின்பக்கச் சில்லுச் சேர்த்தாங்கியில் (மக்காட்) வெளிச்சம் (சிவப்புக் கல்) இல்லாமல் செல்லுதல்.
- தலைக்கவசம் இல்லாமல் (ஹெல்மட்) மோட்டார் சைக்கிளிற் செல்லுதல்.
- வீதியைக் கடக்கின்ற போது முதலில் வலப்பக்கமும் பின்னர் இடப்பக்கமும் மீண்டும் வலப்பக்கமும் பாராமல் வீதியைக் கடந்து செல்லுதல்.
- பஸ் நிறுத்தப்பட்டுள்ள போது பின்பக்கம் செல்லாது முன்பக்கத்தால் வீதியைக் கடத்தல்.
- பாதசாரிகள், சைக்கிள் ஓட்டுனர்கள், சாரதிகள் ஆகியோர் இருபக்கங்களும் அவதானம் இல்லாமல் செயற்படல்.
- வாகனங்களைச் செலுத்துகின்ற போது கையடக்கத் தொலைபேசியில் பேசிக்கொண்டே வாகனத்தைச் செலுத்துதல்.
மேலே உள்ள குறைபாடுகளை அவதானித்து செயற்பட்டால் விபத்துக்களில் இருந்து தப்பித்துக் கொள்வதுடன், விலைமதிக்க முடியாத உயிரையும், தங்களின் பெறுமதியான உடைமைகளையும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
எதிர்காலங்களில் இந்தக் குற்றச் செயல்கள் சம்பந்தமாகச் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராகப் பொலிசாரால் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.
